எண்ணங்களின் எதிரொலி

எண்ணங்களின் எதிரொலி
கவிதை by : பூ.சுப்ரமணியன்
நமது
நல் எண்ணங்கள்
அனுகூலமான
எண்ணங்களே
நற்சிந்தனைகளே
நம்மை எல்லாம்
நல்வழிக்கு நடத்தி
செல்ல உதவும் !
நமது
எதிர்மறை எண்ணங்கள்
எப்போதும் வாழ்வின்
முன்னேற்றத்திற்கு
பிரச்சனைகளுக்கு !
பிள்ளையார் சுழி !
ஆரோக்கியத்திற்கு
சாவு மணி !
நல்ல
உள்ளங்களை
விரோதியாக்குவதும்
நண்பர்களை
பகைவர்கள் ஆக்குவதும்
நம் வாழ்வின்
எதிர்மறை எண்ணங்களே !
தொலைக்காட்சி தொடர்கள்
திரைப்படங்கள் அணிவகுப்பு
பார்த்தவை கேட்டவை
பலவிதமான எதிர்மறை
எண்ணங்களை
நம் உள்ளங்களில்
விதைத்து விட்டுச்
செல்லுகின்றன !
நல்ல நண்பர்கள்
புத்தகங்கள்
பொழுதுபோக்குகள்
வழியில் சென்றால்
நம் எதிர்மறை
எண்ணங்களை
எட்டி உதைத்து விட்டு
எப்போதும் நிம்மதியாக
நம் வாழ்வில்
நலம் காணலாம் !