தமிழே பைந்தமிழே - அறுசீர் விருத்தம்
தமிழே பைந்தமிழே !!! -- அறுசீர் விருத்தம்
#வீழருவிக் காட்சியிலே மனம்மயங்கி
------ #வீ யெனவே விரிகின்ற முகத்தவளை
ஆழமாக நோக்கிடுமே #கயல்களுமே
------ #ஆசுதனைக் களைந்திடுவோம் எந்நாளும்
பாழடைந்த குளத்தினிலே #கமடங்கள்
------- பசையாக உறங்கிடுமே வாழவேண்டி .
ஊழல்கள் இல்லாத உலகினிலே
------- உருவாகும் #இகளியுடன் வான்மழையும் !!!
பார்த்திடுவோம் நீர்நிலையில் ஆமைகளை
------- பக்கத்தில் மணந்தருமே மலர்களுமே
ஈர்க்கின்ற கெண்டைமீனின் கண்ணுடையாள்
------ ஈடிலா மழைமேகம் ஒத்தவளாம் .
சீர்த்தமதி மிக்குடைய அருவியிலே
------- சிறந்தவளாம் நீராட இடியிடிக்க
வார்ப்புடை இவளழகோ கோடியாகும்
------- வனப்பிற்கோ பஞ்சமில்லை வீழ்ந்திடுவேன் !!!
முதல் பந்தியில் பைந்தமிழ்ச் சொற்களும் , அடுத்த பந்தியில் பைந்தமிழ்ச் சொற்களுக்கான பொருளும் அமைய யாத்தப் பாடலிது .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்