என் செல்லகுட்டி அம்மாவுக்கு

என் நெஞ்சிக்குள்ள
தூளிகட்டி தாலாட்ட
குலதெய்வத்திடம்
நான் கேட்ட யாசகம்
நீயடி என் கண்ணே...

வறண்ட என் வாழ்க்கையில்
வசந்தம் வீச வந்த
பூந்தென்றல்
நீயடி என் கண்ணே..

உன் பிஞ்சு விரல்கள்
என் விரலை பற்றி
நடைபழகும் தருணம்
புது பிறப்பெடுத்த உணர்வு
எனக்கடி என் கண்ணே...

சின்ன மணிப்புறா ஒன்று
புதுப்பாசம் தேடி
என் பாசவலையில் வந்து
விழுந்ததோ என்று
என் மனமேங்குதடி கண்ணே...

ஒரு பாலைவனம்
சோலைவனமாவதும்
உலர்ந்த பூக்களெல்லாம்
மலர்ந்து நிற்பதும்
உன் பார்வைகள் பட்ட
அற்புதமா அல்ல அதிசயமா
எனக்கு நீ மகளல்ல
பாச களஞ்சியமடி என் கண்ணே.

எழுதியவர் : செல்வமுத்து.M (25-Mar-17, 9:42 pm)
பார்வை : 115

மேலே