ஐந்தாறு கவிதைகள் எழுதியது தவறு
உனக்காக காத்திருப்பின் சில மணி
நேரங்களில் ஐந்தாறு கவிதைகளை
எழுதி முடித்து இருந்தேன் !
வந்தவள் ..
கவிதைகளை கணக்கிட்டு முத்தமிட்டாள் !
பாழாய்ப்போன மனது ஐந்தாறு கவிதைகளை தான்
யோசித்தது !
அடுத்தமுறை நிச்சயமாய்
ஆயிரம் கவிதைகள்
எழுதுவேன் !