படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து
மதம் !
அன்று நெறி
இன்று வெறி
மதம் !
அபினைவிடக் கொடியது
ஐந்தறிவாக்குவது
மதம் !
மனிதனை
மிருகமாக்கும்
சாதி வெறி !
சங்கம் வளர்த்த மதுரையில்
சங்கம் இல்லாத சாதி இல்லை
அவலம் !