நியாயம் கேட்டால்

" எதைக் கேட்டாலும் இல்லைனு சொல்றீங்களே சார்..
அப்புறம் எதற்கு ரேஷன் கடை?
இழுத்து மூடுங்கள். ", என்று சொன்ன தமிழ் வீர மூதாட்டிக்குத் தாரளமாக வழங்கப்பட்டது ஊர் கூடி தர்ம அடி!...

கொள்ளைக்காரனைத் தட்டிக்கேட்க ஒன்று கூடாத ஊர் வயதான பாட்டியை அடிக்க ஒன்று கூடியது தமிழக வரலாற்றில் பதிக்க வேண்டிய வீர சாதனை!...

மூதாட்டியின் மகளும், மகனும் ஊரோடு சேர்ந்து மூதாட்டியைத் தாக்கியது மிக பெருமை!...

அடித்தனர் உடலில் மட்டுமல்லாமல், வார்த்தைகளால் மனதிலும்...

" நாளைக்கு சாகப்போற கிழவி உனக்கு இதெல்லாம் தேவையா?. ", என்ற வசனத்தில் தொடங்கி, இதுவரை கேட்டிருக்காத வசைமழையையே பொழிந்தோய்ந்தனர், ஊராரும், உறவினர்களும்....

பாவம் அந்த மூதாட்டி!
கண்ணீர் மல்க வீட்டின் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டார்,
தான் தவறிழைத்ததாக எண்ணியிருப்பாரோ? என்னவோ??..

மனதிற்குள் அவரிட்ட சாபத்தை யாறிவார்???...
நிச்சயம் ஒருநாள் அவரின் சாபம் பலிக்கும்....
அவ்வேளையில் யாவரும் கலங்குவோம்.....

ரேஷன் பொருட்களைக் கடத்தி விற்கும் கூட்டமும், அக்கூட்டத்திற்கு உடந்தையாக இருந்த, இருக்கும் மக்கள் கூட்டமும் யாவும் குண்டோடு ஒழியும் காலத்தை எதிர்நோக்கி.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Mar-17, 7:55 pm)
Tanglish : Niyayam kettaal
பார்வை : 907

மேலே