புள்ளி

புள்ளி
அதில் இருக்கிறது
பல பள்ளி !
அதை நான் சொல்லி..
ஆடிடுமோ கடலில் அல்லி!
பணக்காரனுக்கு
பெரும் புள்ளி!
பைத்தியக்காரனுக்கு
கரும்புள்ளி!
வைத்தியக்காரனுக்கு
வெறும் வெள்ளி!
பாமரனுக்கு இல்லையே
சல்லி!
பெண்குழந்தைக்கு
தேவைப்படுகிறது
கள்ளி!
சித்தனை சிறக்க வைக்கிறது - நீர்
முள்ளி!
முருகனுக்கு மோகமிட்டது
வள்ளி!
முழுநேரம் சிரித்துக்கொண்டே
முதுமையை நாம்
தள்ளி..
தள்ளி..
எல்லோருக்கும்
இறுதியில் உண்டு
கொள்ளி!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (31-Mar-17, 12:31 pm)
Tanglish : pulli
பார்வை : 67

மேலே