கண்ணீரே

இமை மூடி அணை போட்டும்
பொங்கி பெருகும் ஜீவநதி!
கண் குட்டை பெருக்கி வைத்த
கலங்கலில்லா நீர் படுகை!
கன்னத்தை தழுவி விழும்
நிலையிலா நீர் கோளம்!
துளிகூட சிதறலில்லா
ஒருகோட்டு நீர்வீழ்ச்சி!
மெய்ப்பட்ட கனவுகளின்
உயிர்த்தெழுந்த ஆர்ப்பரிப்பு!
கட்டுக்கடங்கா கவலைகளை
கட்டவிழ்க்கும் காட்டாறு!
மறைத்தாலும் பீறிட்டு எழும்பும்
மர்மமான நீரூற்று!
உள்ளத்தின் உவகைதனை
கொட்டிப்பாயும் உவர்நீர் ஆறு!
நிறமின்றி சுவைசேர்க்கும்
உணர்ச்சிகளின் நீர்க்கலவை!
துயில் கொள்ளா இரவுகள் பேசும்
துயரங்களின் அடையாளம்!
மனப்புயல் விழிகடக்க
பெய்யென பெய்யும் மழை!. . . . . . . . . . . .