வாழ்க்கை - சிந்தனை
ஒரு மனிதன் தன்னிலை இழக்கும் போது தான் தன்னையே இழக்கிறான்...
மனிதன் தன்னிலையை எதனால் இழக்கிறான்?....
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, பொருளாசை, பணத்தாசை, மது மயக்கம் போன்ற பல காரணிகளால் தன்னிலை இழக்கிறான்...
ஆசைகளே கூடாதெனில் எதற்காகப் பிறந்தோம்??....
இந்த வாழ்க்கையொரு சோதனைக் காலம்....
ஆன்மாவாகிய நாம் உடலை அடைந்து ஆசைகளால் தூண்டப்படும் ஐம்புலனகளுடன் உலாவுகிறோம்....
ஆசைகளைத் தூண்டுவதற்காகப் புறக்காரணிகள் அனைத்தும் நம்மைச் சுற்றிப் படைக்கப்பட்டுள்ளன....
ஆதலால், இந்த உலகில் மனிதன் ஆசை கொள்வதென்பது இயல்பு தான்....
அந்த ஆசைகள் பேராசைகளாக மறுபரிணமிக்கும் நேரம் மனிதனின் பாதையின் திசைத் திசை மாறுகிறது....
வாழ்க்கையென்னும் தேர்வில் வெற்றி பெற இயலாத நிலையை அடைகிறான்....
அவன் செல்லும் பாதை தவறு என்று எடுத்துரைப்பதை இகழ்கிறான்...
ஏனெனில் , அவன் தன்னிலை இழந்துவிடுவதால், தன்னை இழந்து தேடுகிறான் அவனது பேராசை காட்டிய வழியில்....
தன்னை அறிந்தவன் அதிகமாக ஆசைப்படுவதில்லை...
தன்னை அறிந்தவன் அதிகமாகத் துன்பப்படுவதில்லை....
உண்மையில் தன்னை அறிந்தவன் பிறரைப் புண்படுத்துவதில்லை.....
காரணமின்றி ஏதும் நிகழ்வதில்லை...