இலட்சியம்

இலட்சியங்கள் உள்ளவரை
வரும் தோல்வியெல்லாம் தோல்வியில்லை...

இலட்சியத்தின் முதற்படி முளைக்கும் முயற்சி
என்ற சிறு செடிதான்...

வேரினைப் போலத் தேடிப் போ
உன் கனவுகள் என்றும்
நீரூற்றைப் போல்

தண்டினைப் போல
நிமிர்ந்து நில்
உன் சுமகளை எல்லாம்
சுமந்து நில்

இலைகள் உதிரந்துன்னை
ஏமாற்றலாம்
பாரம் குறைந்ததென்று
மகிழ்ந்திடு

தனியே நீ மட்டும் தழைத்திடு...

வெட்ட வெட்ட
வளர்ந்திடுவேன்
என்ற வீர வசனம் பொழிந்திடு..

உன் வளர்ச்சிக்குக்
காலங்கள் இரையாகலாம்

என்றும் நீ வளராமல் மட்டும்
இரையாகிடாதே...

வெற்றிக்கு அருகில்
நீ நிற்கும் நாளில்
உன் மீது மலர்ந்த பூக்களெல்லாம்
சேர்ந்து உனக்கு மாலையிடும்...

உதிர்ந்த இலைகளும்
உனக்கும் உரமாகிடும்...

இலட்சியங்கள் உள்ளவரை
வரும் தோல்வியெல்லாம் தோல்வியில்லை...

எழுதியவர் : ராஜ் சரண் (1-Apr-17, 2:57 pm)
சேர்த்தது : ராஜ் சரண்
Tanglish : elatchiam
பார்வை : 240

மேலே