மருட்பா

காசினை மட்டுங் கவனத்திற் கொண்டென்றும்
மாசுகள் சூழ்ந்த மதிகொண்டு வாழ்வோரே
நீட்டிப் படுக்கையில் நின்னுயிர் போய்விடின்
கூட்டிக் குவித்தபணம் கூட வருவதில்லை
நின்று நிதமும் நிலைக்கும்
அன்பைச் சொரிந்து அமைதிகொள் வீரே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Apr-17, 2:10 am)
பார்வை : 80

மேலே