பூவை விட மென்மையான புன்னகையின் புது வாழ்வு

அதிகாலை பனி பாதம் நனைக்க
சில்லென்று மேனி சிலிர்க்க
சட்டென்று கீழே பார்க்கையில்
மொட்டொன்று பூத்திருந்தது
உதயமாகும் இளங்காலை ஆதவன்
பிரபஞ்சத்தை பிரகாசமாக்கிட
நீளவானில் நீலக்கடலும்
நீந்தி மகிழ்ந்தது
அலையும் நிற்காமல் தாலாட்டு பாட
மணல் பரப்பில் மழலையும் கண்ணுறங்கியது
நித்தம் தென்றல் கொண்டுவந்தது
மலரின் வாசனைகளை எந்தன் அருகில்
அதில் இணைந்தே கலந்துவந்தது குயில்களின் குரலும்
பார்க்கும் கண்ணை ஆடவைத்திடும் மயில்களின் ஆட்டம்
வசந்தம் வீசும் மல்லிகை தோட்டம்
இடையில் தவழும் பால் மணம் மாறா குழந்தையின் சிரிப்பு
வஞ்சனை அறியா சிறுவர்களின் விளையாட்டு
கோலம் போடும் தமிழ் பெண்ணின் பண்பாடு
எதிர்பாராமல் வரும் புது கோடை மழை
மக்களின் உள்ளத்தில் மண்ணின் வாசனை
மண்ணில் புன்னகை பூத்து
புது வாழ்வு மலர்கிறது

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Apr-17, 12:01 am)
பார்வை : 83

மேலே