புல்லாங்குழல் தென்றலிசை

புல்லாங்குழலில் பூபாளம்
தென்றலிசையாக காற்றில் மிதந்து வருகிறது
புரிந்ததுபோல்
மலர்களும் தலையாட்டுகிறது
புரியாமலே
பசுக்களும் கன்றுகளும் செவி ஆட்டுகிறது
புரிந்தா
நானும் தலை ஆட்டுகிறேன் !
இசை ரசிக்க
இதயம் இருந்தால் போதும்
இசை நெஞ்சில் அமுதமாய்ப் பொழியும் !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Apr-17, 9:29 am)
பார்வை : 96

மேலே