குணம்
உன்னை ரசித்தேன்... உன்
அழகை அல்ல... உன்னில்
குடி கொண்ட இரக்க
மனம்... அதில் கண்டேனடி
உன் அழகை... யார் மனதையும்
புண் படுத்தாமல் பக்குவமாய்
அன்பாய் எப்பொழுதும்
அறிமுகம் கொண்டவரை கண்டால்
சிந்துவாயே ஒரு புன்னகையை...
அங்கே கண்டேனடி எனை
புதை கொள்ளும் அழகை...
உன் மனம் கொள்ளும் மணாளன்
உண்மையில் கொடுத்து
வைத்தவனடி... உன் அன்பால்
பூரித்து போவனடி...