குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்!
குழந்தை, குழந்தையைச் சுமக்க நேரிடும்!
கை தாங்கலாய், வாங்கும் பாரம் அல்ல,
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் பாரம்!
குழந்தையாய், உள்ளமும், உடம்பும்!
தாயாய், இன்னொரு குழந்தையை, இன்னும் ஒரு குழந்தையை...
ஆரோக்கியம்?
பிறக்கும் குழந்தைகளுக்கும், பெற்றெடுக்கும் குழந்தைக்கும்(தாய்க்கும்),
கேள்விக்குறியாய்!
தவிர்க்கவும், குழந்தைத் திருமணத்தை!