வாழ்ந்துபார்க்கலாம் வா

எல்லாம் அலுத்துப்போகிறவரைதான் என்று அவளும் ,,
எல்லாம் ஆயுள்வரை என்று நானும்,

கோபம் பிணக்கம், பிடிவாதம் பிடித்து,
சண்டையிட்டு,
வாழாமல் விட்டுவிட்ட நேற்றுகளுடைய நொடிகள்
இனி வரப்போவதில்லை,

வெறுமையுடன்,
புகைப்படங்களைப்பார்க்கும் உன் முகம்
எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன்,

இந்நொடிமுதல்,
எதையும் விரையம் செய்யாதே பயணிக்கலாம்
நிகழ்வுகளையடுத்து
என்றாவது பிரிந்துவிடலாம் வா,

வாடும் பூக்களைப் படம்பிடித்து,
என்றாவது ரசிப்பதைப்போல, ம்ம்திரும்பிப்பார்க்கும் போது,
அலுத்துவிட்டவைகள் தான் அழகானவை தெரியுமா ம்ம்,

வாழ்த்தாமல் விட்ட பிறந்தநாட்களின் பின்னால்,,
யாரும் ஓடோடிப்போவதில்
வயது குறைந்துவிடப்போவதில்லை,
நரை இடுக்குகளில் வாழும்படி
இனிவரும் நம் பிறந்தநாட்களை கொண்டாடிவிட்டுப் பிரிந்துவிடலாம் வா

நாக்கூசாத வார்த்தைகளினால்,
நம் உதடுகள் முத்தமிட்டும்,
பின் நாவுகள் பின்னாமல் விட்டிருக்கலாம்,

இனி நீ பேசு, நான் மௌனமாகிறேன்,
நாட்கள் கொஞ்சம் போகட்டும்,
ஆபாசங்கள் அர்த்தம் பெறட்டும்,
மீண்டும் நம் நாவுகளால் பின்னிக்கொள்ளலாம்,

அரவங்கள் ரெண்டு, கூடும் ஒளிர்நிசிபோலே

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (4-Apr-17, 2:50 am)
பார்வை : 361

மேலே