குப்பையில் ஓர் காகிதம்

குப்பையில் ஓர் காகிதம்
ஒரு முறை இருமுறை அல்ல
பலமுறை யாசித்தேன்
எனைத் தீண்டும்முன் யோசி என!...

ஒரு பித்தனைப் போல்
சித்தம் கொண்டவனாய்
கூரிய முனை கொண்டு
வெண்ணிற என் அங்கமெலாம்
பங்கம் விளைவித்தான்


என் முக்கலையும் முனுகலையும்
செவிமாடுக்கா கயவன்
அவன் எண்ண ஓட்டத்தில்
நினைத்ததெலாம்
கிறுக்கி வைத்தான் என்னில்

மீண்டும் மீண்டும் வாசித்தான் என்னை
இறுதியில்
அவன் இழைத்த தவறுக்கு
தண்டனை எனக்காய்
கசக்கி எறிந்தான்
குப்பையில்.........

எழுதியவர் : சு உமாதேவி (6-Apr-17, 10:02 pm)
பார்வை : 108

மேலே