நிலவே தேய்வாய் வளர்வாய் நிறைவாய்
இரவின் ஆட்சி...
நான் நடந்து வந்தேன்
நிலவு நகர்ந்து வந்தது
என்னோடு...
பேருந்து நிலையம் முதல்
என் வீட்டு வாசல் வரை...
ஒளியும் குளுமையும் தந்து...
நிலவே நீ எனக்கு
வழி காட்டினாய்... நல்ல
வழிகாட்டியாய்...
முப்பது நிமிட நடையில்
என்னோடு வந்தாய்
வளர்ந்தாய் வளர்பிறையில்..
நான் என் வீடு வர வர
ஆனந்தம் கொண்டு
வளர்ந்தாயோ...
வளர்பிறையில்...
பவுர்ணமிக்குப் பிறகு
உன்னைச் சந்திக்கிறேன்
இதுபோன்று ஒரு
நடைப் பயணத்தில்...
என் கால் வலிப்பது கண்டு
தேயப் போகிறாய்
தேய்பிறையில் நீ...
எனது வட்டப் பாதையில்
ஒரே நாளில் களைத்துப்
போகிறேன்...
கோடிக்கணக்கான
ஆண்டுகள்
உனது வட்டப் பாதையில்
களைப்பு உன்னை
நெருங்கவில்லையே என
நான் வியந்து போகிறேன்...
இரவு நேரம் எத்தனை
மனிதர்களைப் பார்த்திருப்பாய்
உன் வாழ்வில்...
அதில் எத்தனை பேர்
என்போல் அடிகள்
எடுத்து வைத்தனர்
இத்தனை தொலைவிற்கு
இத்தனை அடிகள் என...
இந்த இரவில்
எத்தனை பேருக்கு
வழி காட்டினாய்
இது போல் நீ...
நிலவே நீ அறிவாய்...
அதை நீ எனக்குச்
சொல்வாயா...
😃👍