குருவியின் வாசம்

மஞ்சள்நிற கழுத்துடைய குருவியே...
பகல் முழுவன் பறந்து இரை தேடி
உழைத்து... களைத்து...
நிதமும் மாலை முதல் மறுநாள் காலை வரை
என் வீட்டு தோட்டத்தில் நீ வந்து ஓய்வெடுக்க
நான் என்ன தவம் செய்தனையோ...!
பொன்னாங்கண்ணி கீரைத்தண்டை ஒத்த உன் கால்களால்
நின்று கொண்டே துயிலும் காட்சி என்னே அழகு...!
நீ தலை சாய்க்க உன் புற முதுகினை
பஞ்சு மெத்தையென பக்கவாட்டில் - தலை
நுழைத்து அதை உன் இறக்கை கொண்டு மூடி
முகம் மறைத்து மறந்துறங்குவது - எனை
ஒரு பூப்பந்து என எண்ணத்தோன்றுகிறது...!
உனக்கு வீடில்லயே என்ற வேதனை ஒருபுறம் இருக்க...
எத்தனை நம்பிக்கை உனக்கு என் வீட்டார் மீது
உனை ஏதும் செய்யமாட்டோம் என்று...
உனக்கறியாமல் உனைசீண்டாமல்
நான் ரசித்து எடுத்த புகைப்படம்...! இந்த சூழல்...!
உன் ஜோடி இனத்தையும் அழைத்து வந்த நீ
உறங்குவது ரோஜா செடியில் - உன்
இனம் உறங்குவது மருதாணி செடியில்...!
இந்த நிகழ்வை கண்டவுடன் மெய்சிலிர்த்து
எனக்கு தோன்றிய எண்ண அலைகள்...
வானத்துப் பறவைகளை நோக்குங்கள்;
அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை;
களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை.
உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார்.
அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா...!
- நா. அருள்சிங், சிவந்திபுரம்
*******