புத்தாண்டு வாழ்த்து

====================
பொற்றடை பேர்கொண்ட புத்தாண்டு பெண்ணிவள்
நற்றே ரெனவே நடந்துவர – முற்றத்தில்
பூத்தூவி முன்நின்று புன்சிரித்து இன்பமுடன்
வாழ்த்தி வரவேற்போம் வா!

நற்றமிழ் சிந்தும் நலம்சூழ்ந்த புத்தகமாய்
கற்பிக்க வந்த கலைமகள் - உற்பத்தி
செய்யும் உயர்முயற்சி செந்தேன் குளித்தெழ
உய்விக்கச் செய்வாள் உவந்து

சித்திரை மாதத்து சீர்மிகு செல்லமிவள்
இத்தரை கொண்ட இருள்நீக்கி – பத்தரை
மாற்று பசும்பொன் மினுக்கமென சிந்துமொளி
மாற்றிவைக்கும் மக்கள் துயர்

எப்போதும் வாழ்வில் எதிர்பார்க்கும் ஆனந்தம்
தப்பாமல் தந்து தரைமேலே – இப்போதும்
முப்போகம் செய்ய முயற்சிக்கும் மேகமென
வெப்பம் குறைக்குமென் வாழ்த்து,
*மெய்யன் நடராஜ்

தோழமைகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Apr-17, 3:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 88

மேலே