அழிவுப்பாதை

அகிம்சைப் போதிக்கும் உலகிலே ஆயுதங்களும் உற்பத்தி செய்தே உயிர்களை வதைக்கவும் போதிக்கிறது என்றே இயற்கையின் புரட்சியை எதிர்நோக்கினேன்..
இயற்கையிடம் பேசினேன்..
இயற்கையோ எனக்கு உணர்த்தியது, " என்னை அழிக்கும் மனிதனையும் முடிந்த அளவு வாழ வைப்பதே எனது கடமை.. மனிதர்களில் போலியான அன்பு இருக்கலாம். ஆனால், எனது அன்பு என்றும் உண்மையானது. ", என்றே தனது அன்பை..

தூய அன்பே ஆயுதமாகியதாலே வஞ்சிப்பவனையும் நேசிக்கிறது..
துரோகியையும் நேசிக்கிறது..
அறிவில் சிறந்த மனிதர்களே நம்மில் யாருக்கு உள்ளது இந்த இயற்கையின் மகத்தான பண்பு?.

மிருகங்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் மானிடர்களே, சுவாசக்காற்றிடமிருந்து ஏன் கற்றுக்கொள்ளவில்லை?.
நிலத்திடமிருந்து ஏன் கற்றுக் கொள்ளவில்லை??.
ஆசானுமாகிய ஆதவனிடமிருந்து ஏன் கற்றுக் கொள்ளவில்லை???.

பாதுக்கும் இயற்கையின் முன், அழிக்கும் மனிதர்களெல்லாம் கீழானவர்களே..

தான் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்து யாவும் பெற வேண்டுமென்றே எண்ணம் கொண்டு உலகையே ஆட்டுவிக்கும் மனிதக் கூட்டமே,
உங்களைக் கண்டு வறண்டு போகிறது இயற்கையின் மனம்..

இன்னும் அழிக்கும் பணியை நிறுத்த மாட்டீர்களெனில் அழிக்கப்படுவீர்கள் உங்களுடைய பணியாலே.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Apr-17, 11:34 am)
பார்வை : 511

மேலே