புளிய மரம்
கோவிந்தசாமி
தையற்கடை ஊழியர்
இரவு நேரங்களில்
கடையில் வேலை முடிந்து
முகப்பு விளக்கு வைத்த
மிதிவண்டியில் வீடு திரும்புவர்
சரியான பயந்தாங்கொள்ளி
சின்னதாக சத்தம் கேட்டால் கூட
வேகவேகமாக சைக்கிளை
மிதித்துக் கொண்டு வீட்டிற்கு பறப்பார்
அவர் வரும் வழியில்
ஓர் அடர்ந்த புளியமரம் உள்ளது
கோவிந்தசாமியின் சகாக்கள்
ஒருநாள் அந்த புளியமரத்தில் ஏறி
அவரை பயமுறுத்த நினைத்தார்கள்
ஆனாலும் அச்சத்தின் காரணமாக
இரவு நேரம் வந்தாலே
புளிய மரத்திற்கு செல்ல அஞ்சுவார்கள்
ஒருநாள் தைரியம் முத்துசாமி
அந்த புளிய மரத்தில் ஏறிவிட்டார்
இன்று எப்படியவது கோவிந்தசாமியை
பயமுறுத்த வேண்டும் என்பது திட்டம்
மரத்தில் ஏறி
ஒரு கிளையின்
முத்துசாமி படுத்திருந்தார்
அவருக்கு மிக நெருக்கமாக
புஷ் புஷ் என்று ஓசை
அந்த இருளிலும்
ஒரு பாம்பு நெளிவது
முத்துசாமியின் கண்ணுக்கு புலப்பட்டது
கிளையிலிருந்து பிடி நழுவி
முத்துசாமி விழுந்தார்
அவரை காணாது
தேடி வந்த மற்ற நண்பர்கள்
முத்துசாமியை வீட்டிற்கு
தூக்கி வந்தனர்
உயரம் குறைவாக இருந்ததால்
அடி ஒன்றும் பலம் இல்லை
தன்னை நம்பி பயணிக்கும்
கோவிந்தசாமிக்கு ஆதவராகவும்
குறுகிய எண்ணத்துடன்
தன்மீது ஏறிய முத்துசாமிக்கு
பாடம் புகட்டியதாகவும்
ஒரு கதை உண்டு ஊருக்குள்...