இது ஒரு இன்னிசை விருந்து
தென்றல் தாலாட்டு பாட
அசைந்தாடி மூங்கில்கள் குழல் ஊத
கானகம் சென்ற கன்றுகளுடன் பசுக்கள்
கண்ணன் குழல் ஓசை என்று அதைக் கேட்டு மயங்க
மாமரக் கிளைகளில் மந்தி கூட்டங்கள்
இவ்விசைகேட்டு ஆடாமல் குந்தி இருக்க
என்னென்றுரைப்பேன் இவ்வியற்க்கை எழிலை
என்று நானும் அந்த எழிலில் என்னை மறந்திருந்தேன்