வயலோடு விளையாடு --- நாட்டுப் பாடல்
வயலோடு விளையாடு - நாட்டுப்புற பாடல்
வயலோடு விளையாடு மச்சானே !
வரப்பெல்லாம் நடை போடு மச்சானே !
வயக்காத்து சூடு தணிக்கும் மச்சானே !
வளமான வெள்ளாம மச்சானே !! ( பெண் )
கதிரெல்லாம் முத்திடுச்சு புள்ள !
கண்ணுக்கு அழகாத் தெரியுது புள்ள !
கருவாச்சி நீயுந்தான் புள்ள !
கதிர்போல தலை குனியணும் புள்ள ! ( ஆண் )
வாய்க்கா மறைவுல மச்சான் !
வகையா விளையாடுவோம் மச்சான் !
வயத்தக் காயப் போடாத மச்சான் !
வறண்டு போகும் தேகமும்மே மச்சான் !! ( பெண் )
ஓரக் கண்ணால பாக்காதடி புள்ள !
ஒதுக்கீடும் கேட்காதடி புள்ள !
ஓரம் போனா என்ன செய்வேன் புள்ள !
ஒத்தையிலே போறவளே புள்ள !! ( ஆண் )
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்