சொல்லும் பொருளும் 3 - சாதனங்கள் ஈவாள் சதுர்

சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. எனவே உதாரணத்திற்கு சதுர் என்ற ஒரு சொல்லை இங்கு பார்ப்போம்.

திரு.குருநாதன் ரமணி அவர்களின் கீழேயுள்ள வெண்பாவில் உள்ள ஈற்றடியில் சதுர் என்ற சொல்லின் பொருளறிய வலைத்தளத்தில் தேடினேன்.

இருவிகற்ப நேரிசை வெண்பா

குறுமிளகைக் கண்டோம் குறள்வடிவில் ஐயா
கிறுகிறென உம்சிலேடை காணும் - குறுகுறுப்பில்
நூதனத்தில் நூறடித்து நூலடிக்க நூன்மடந்தை
சாதனங்கள் ஈவாள் சதுர். - குருநாதன் ரமணி

சதிர் என்ற சொல் தெரியும்; சதுர் நான் அறிந்திருக்கவில்லை.

எனவே இரண்டு சொற்களின் பொருளினைத் தருகிறேன்.

சதுர் 1
Four, used only in compounds; நான்கு. சதுர்முகன்.
சதுர் 2
1 . Ability, skill, dexterity; சாமர்த்தியம். ஆலால முண்டா னவன் சதுர்தா னென்னேடி (திருவாச. 12, 8)
2. Means, contrivance; உபாயம். பொருடருமச் சதுரெப்படி (அரிச். பு. காசிகா. 18)
3. Cheapness; மலிவு. சதுராய் அந்தப் பண்டத்தைக் கொண்டான். (w.)

சதுர் 3 சதிர். (யாழ். அக.)
.
சதுர் 4 - த்தல் .
besmear; to apply in excess or profusion, as ointment;
அப்புதல். (w.)

சதிர் 1 .

1. See சதுர்,1..
2. Greatness, excellence; பெருமை. சனகன் சதிருரையாதவர் (பிரபோத. 5,32).
3. Fortune blessing; பேறு. தா சதிரிதுபெற்று (திவ்.திருவாய். 2,7,1).
4. Beauty, loveliness; அழகு. சதிராயிருந்த ரதி (தனிப்பா. ii, 11, 12).
5. State, condition; நிலைமை. முற்றுந் தவிர்ந்த சதிர் நினைந்தால் (திவ்.திருவாய். 8, 10, 1).
6. Cheapness, low price; குறைந்தவிலை. சதிராய்கொண்டான்
7. Economy, frugality; செட்டு

சதிர் 2 - த்தல் ,
சதிர்1.
To gain strength or power; வலிமை பெறுதல். அன்பனா யடியேன் சதிர்த்தேன் (திவ். கண்ணிநுண். 5).

சதிர் 3 Boundary, limit; எல்லை.
சதிர் 4
நாட்டியம்.
சதிர் 5
n. < சதுர் Slight effort which produces great results;
பெரும்பயன் அளிக்குஞ் சிறு முயற்சி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-17, 8:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 162

சிறந்த கட்டுரைகள்

மேலே