உனைக் காணும் வரைநான் காக்கிறேன்
பிரியவே முடியாது மாள்கிறேன்
புரியவே வழியில்லை மாய்கிறேன்
தனிமைச் சிறையிலே காய்கிறேன்
தவிப்பிலும் விளிப்பிலும் தேய்கிறேன்
இருளிலும் உன்முகம் காண்கிறேன்
குளிரிலும் தீயினால் வேகிறேன்
வழியெல்லாம் உன்முகம் பார்க்கிறேன்
வந்திடு தரிசனம் கேட்கிறேன்
காணும் வரைநான் காக்கிறேன்
கண்டதும் என்னுடல் மாய்க்கிறேன்
ஆக்கம்
அஷ்ரப் அலி