உழவும் உழவன் காத்திருப்பும்

இன்னமும் தீர்வு இல்லை
தீர்வு இல்லாது திரும்பவும் மனம் இல்லை ....

சுதந்திர நாடு என்பதாலோ என்னவோ
மொத்தமாய் எடுக்கிறான்
மரணத்தையும் மானைத்தையும் ............

சோற்றுக்கு வழி இல்லை என்று சோறு
கேட்கவில்லை நாங்கள்
சேற்றோடு நாங்கள் நின்றால் தான்
உன்னோடு நாளை சோறு ,,,,,,,,,,,,

செத்துவிட்ட என் விவசாய தெய்வத்தை வெறுக்கிறேன்
தேவைக்கான போராட்டத்தில் ஒரு கை
குறைந்து விட்டதே என்று ,,,,,,,,,,,,,,,,

எடுத்து கொள்ள தெரியாமல்
போராடவில்லை நாங்கள்
எடுத்து தந்து விடத்தான்
போராடுகிறோம் நாங்கள்,,,,,,,,,,,,,,,,

துளியும் கண்டு கொள்ளாத அரசே
தூண்டுகோல் என்று எதையும்
தூக்குவோம் நாங்கள் ,,,,,,,,,,,,,,,,,

அதை தொட்டுக்கொண்டு திரும்புவதும்
தூக்கிக்கொண்டு வருவதும்
( ) அரசே உன் கையில் தான் உள்ளது .........................

எழுதியவர் : வான்மதிகோபால் (18-Apr-17, 11:24 am)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : uzhavu
பார்வை : 890

மேலே