உழவை கானாத அரசு
வேண்டும் ஒரு திருப்பம் எங்களுக்கு
வழி இல்லை வேறு பக்கம் ,
என்று சொல்லி பார்த்தோம்
கேட்டும் பார்த்தோம்
ஏதும் நகரவில்லை - சரி நாங்கள்
நகர்த்தலாம் என்று
ஊரு மறந்து தலை நாடு
வந்தோம்
நேரடியாய் இறங்க முடியும் இருந்தும்
நாங்கள்
பொறுமையில் தலை தேர்ந்தவர்
என்று ஊரு சுட்டிய பெயருக்காக
இன்னம்
பொறுமையை கை கொண்டு இருக்கிறோம்
சிறிது சிறிதாய் என் --- (அல்ல அல்ல )
" தமிழ் " போராட்டம்
இன்னம் தொடருது எங்கள்
பொறுமையால் மட்டும்
வீரமாய் வீறு கொண்டு
எழவும் முடியும்
அதை கொஞ்சமாய் மறைத்து --- (மறந்து )
வைத்து இருக்கிறோம்
தட்டி எழுப்ப நினைக்காதே
இன வெறியனே
நாங்கள் கேட்பது
பேராசைதான்
உங்களுக்கு
இன்னம்
நாங்கள்
சோறு போடவேண்டும் எனும்
பேராசை தான்...................................................