உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
குறள் வெண்செந்துறை :
கள்ள மல்லா தென்றும் கசிந்து ருகிடும் மெழுகாய்
உள்ள மெங்கும் பொங்கும் நல்லொளி வீசுதல் சிறப்பே
கறந்தப் பாலாய் மனமும் கருணை மிளிரும் சொல்லும்
சிறகு விரித்து வானில் சிந்தனை பறக்க வேண்டுமே
மண்ணி லுதிர்ந்தும் சிரிக்கும் மலராய் நாளு மிங்கு
புண்பட் டாலு மெண்ண முயர்வா யிருத்தல் நன்றே
காலையி லுதிக்கும் சூரியன் கதிராய் கொடுமை யெரித்து
பாலை வனமதை சோலையாய் மாற்றிட வாழ்வும் சிறக்குமே
தன்னோ டிணைந்து வாழ்வார் தன்னல மற்ற மனத்தில்
நன்மைகள் செய்த வரையு முலகி லுயர்த்திட வேண்டுமே...