சின்ன சின்ன வேலைகளாம்
சின்ன சின்ன வேலைகளாம்,
சிறப்பான வேலைகளாம்,
சிக்கனம் சேர்க்கும் வேலைகளாம்,
சிங்கார வேலைகளாம்,
கவனம் காக்க, கவலைகள் மறக்க,
மனம் ஒன்றி, மனம் மகிழ,
கருத்தாய்ச் செய்யும் வேலைகளாம்,
வேலைகளில் உயர்வு, தாழ்த்தி என்றில்லை,
நம் வேலைகளை நாமே பார்க்க,
நலம் யாவும் சேரும்,
வளம் அனைத்தும் பெருகும்,
உடல் வருத்தி உழைக்க,
அயர்வு நீங்கும், அறிவு சிறக்கும்.