உழவர் பெருமை
உழவர் பெருமை!
நமக்காக செல்லமே நமக்காக,
உழவரும், வயலும், வரப்பும், விளையும் நெல்லும் நமக்காக!
உழவர் பயிராக்க, கண்ணே நெல்லாக்க,
சேறும் சகதியுமா கழனியில் இருப்பது நமக்காக!
கழனிக்குள்ளே இறங்கி நாத்தை நடுவது,
விளைந்ததும் கதிரை அறுத்து, களத்துல போடுவது,
வயலை மீண்டும் ஒருதரம் வளப்படுத்துவது,
உரத்தை, விதையை தூவுவது,
பயிர் வளர தண்ணியை பாய்ச்சுவது,
சோத்துல நாம கை வைக்க, அவுங்க சேத்துல கால் வைப்பது,
எல்லாமே நமக்காக!
எந்திரமய நகரத்திலே, கணிணி முன்னே நாம இருந்தா,
இந்த வயலில் விளைஞ்ச, அரிசி, பருப்பு அங்க வந்து இறங்கிடுமே!
எல்லாம் உழவர்கள் செய்வது நமக்காக!
புது ரக விதைகளை, புது வகை இயந்திரங்களை,
நவீன முறைகளை, வெயில் இடி மின்னலில் இருந்து
காக்கும் கருவிகளை நாம் கண்டுபிடித்து தருவது,
அவர்களுக்காக, உழவர்களுக்காக!