பயங்கரவாதக் கனவு

நிம்மதியாக தூக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரம், காலைப் பொழுதாகிவிட்டதால், எழுந்து காலைக்கடன் முடித்து கிளம்பிய தருணம் கைபேசி அலறவே எடுத்து பேசினேன்...
மறுமுனையில் நண்பன் முற்றிலும் பதற்றமாக பேசினான், " ஏழைகளில்லா உலகை உருவாக்க பணக்கார வர்க்கம் தீட்டிய புதிய திட்டமாக ஏழைகளையெல்லாம் அழித்துவிடுவது என்று முடிவு செய்து இருக்கிறார்கள். ", என்று...
அதைக் கேட்ட நான் அதிர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக தெரிந்த ஏழைகள் அனைவரும் ஒன்றாக கூட்டி அந்தத் திட்டத்திற்கு எதிராக குரலெழுப்பிக் கொண்டே செல்கையில் திடீரென துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்க, என்னோடு வந்தவர்கள் யாவரும் சிதறி ஓட, நடப்பதைக் கண்ட நான் சிலையாய் நின்றிருந்தேன்...
சுற்றியிருந்தவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்திய துப்பாக்கிகள் என்னைக் குறிவைக்கவே,
நானும், " ஏன் தயக்கம்? ஏழை இவனையும் சுட்டு வீழ்த்துங்கள். ", என்றே கத்தினேன் ஆவேசம் வந்தவனாய்...
சட்டென துப்பாக்கிகள் சுட ஆரம்பித்த தருணம்,
அதிகாலை அலாரம் சத்தம் கேட்டு பதறி எழுந்தேன்....
அப்போது தான் தெரிந்தது, நடந்தது எல்லாமே கனவென்று....

நடக்கவிருக்கும் சம்பவத்தின் முன்னறிவிப்பாக இருக்குமோ???....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Apr-17, 12:01 am)
பார்வை : 749

மேலே