காதல் மணம் புரிந்தோரே கவிஞர் இரா இரவி

காதல் மணம் புரிந்தோரே ! கவிஞர் இரா .இரவி !

இவளையா காதலித்தோம்
என்று காதலனும் !

இவனையா காதலித்தோம்
என்று காதலியும் !

நினைக்காதவாறு வாழ வேண்டும் !

காதல் திருமணங்கள் நிலைப்பதில்லை
என்ற கூற்றைப் பொய்யாக்க வாழ வேண்டும் !

இன்பம் துன்பம் எதுவரினும்
இருவரும் இணைந்தே வாழ வேண்டும் !

காதலுக்கு மரியாதை தந்து
காதலர்கள் வாழ வேண்டும் !

பிரிவதால் வரும் திட்டு
உங்களுக்கு மட்டுமல்ல
காதலுக்கும்தான் ! கவனம் !

உங்களின் பிரிவு உங்களுக்கு
மட்டுமல்ல துன்பம் !

வருங்கால காதலர்களுக்கும்
தந்திடும் துன்பம் !

பெற்றோர் முடித்த இணைகள் பிரிந்தால்
பெரிதாய் யாரும் பேச மாட்டார்கள் !

காதல் திருமணம் புரிந்தோர் பிரிந்தால்
பெரிதாய் எல்லோரும் பேசுவார்கள் !

விட்டுக் கொடுத்து வாழுங்கள்
வீண் சண்டைக்கு இடமளிக்காதீர்கள் !

மண்ணில் மிக உயர்வானது காதல்
காதலின் கண்ணியம் காக்க வேண்டியது
காதல் இணைகளின் கடமை !

எத்தனை நாள் வாழ்வார்கள் என்று
ஏளனம் பேசியோர் முன்
என்றென்றும் இணைந்தே
வாழ்ந்திட வேண்டும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (20-Apr-17, 3:52 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 93

மேலே