சேராதோ உன்னிடம்
![](https://eluthu.com/images/loading.gif)
இதழ்கள் சொல்லாததை
இமைகள் சொல்லுமென
நினைத்தேன் !
இமைகளும் தயங்கியது
உன் விழி
பார்க்கையில் !
என்ன செய்வேன்
நான் !
உள்ளூற கிடந்த
ஆசை யாவும்
இதழும் விழுங்க
இமையும் மறைக்க
கவிஞனாகி போனேன்
என் கவிதை
என்றாவது ஓர்
நாள் உன்னை
சேராதோ என்று !