போதிதர்மா

போதி தர்மா
இறப்பதற்க்கு முதல் நாள்  தன்னுடைய விருப்பத்தை சீடர்களிடம் தாம் இந்தியாவின் முக்கிய இடமான இமய மலை செல்ல இருப்பதை அறிவித்தார்.
மிகப் பெரிய மாகா ஞானியான அவர்
சீடரின் மனங்களையும் தனக்கு விஷம் வைக்கும் சம்பவம் அறிந்து தன்னுடைய இடத்திற்க்கு ஒருவரை தேர்வுசெய்தார் நால்வரில் ஒருவர் தேர்வு செய்யபட்டபின்அதில் மற்றவன் விஷம் கலந்த உணவு அவருக்கு பறி மாற அதை அறிந்த போதி தர்மர் விஷ முறிவு மூலிகை முன்பே உட்கொண்டு ஜென் மத கோட்பாட்டின் படி உணவை அருந்தினார் பின்பு ஆழ்ந்த சமாதியில் இருக்க தவறான புரிதலுடன் சீடர்கள்
அவரை அடக்கம் செய்யதனர்.ஆழ்ந்த சமாதியில் இருந்த போதி தர்மர் மூன்றாம் நாள் சமாதியை விட்டு எழுந்தார்..
அவருடைய கண்களில் கோபம் மனதில் ஜென் தொடர இமய மலை நோக்கி சென்றார் ,வழியில் ஒருவன் ஐயா நீங்க போதிதர்மர் தான நீங்க இறந்துவிட்டதை நான் பார்த்தேன் நீங்கள் எப்படி என கேட்டான் .
பின்பு ஒரு செருப்பு மட்டும் தடியில் மாட்டியுள்ளது மற்றொன்று எங்கே என்றான்.
விரைவில் நீ புரிந்து கொள்வாய் என புறபட்டார்.
அவரது கண்களில் இமய மலை தெரிய வியந்தான்..
இமய மலையின் பனி பாறைகள் நிறைந்த இடங்களில் போதிதர்மர் தன்னுடைய உச்சகட்ட நிலையில் இன்றும் உள்ளார்.
தன்னை சந்தித்த ஒருவன் ஆவலுடன் சென்று  அவருடைய சீடர்களுக்கிடையே போதிதர்மா உயிருடன் உள்ளார் என தெரிவித்தான் அனைவரும் சென்று சமாதியை தோண்டினர் அங்கு ஒரே ஒரு செருப்பு மட்டும் சமாதியில்
இருந்தது வழியில் போதி தர்மாவை சந்தித்தவன் புரிந்து கொண்டான்..
தன்னுடைய பாதியை தான் வாழ்ந்த இடத்திற்கும் மற்றொரு பகுதியை தன் சொந்த மண்ணுக்கும் எடுத்து சென்றார் என..


  • எழுதியவர் : சிவசக்தி
  • நாள் : 21-Apr-17, 8:06 am
  • சேர்த்தது : தனஜெயன்
  • பார்வை : 238
Close (X)

0 (0)
  

மேலே