அவன்

நிச்சயம் அவன் அந்தக் கிரகத்தைச் சேர்ந்தவன் அல்ல...

அங்கு உருவாக்கியது எல்லாம் அவன் அல்ல... அவனிடம் ஒரு மூட்டையாகக் கட்டி அவனைக் கிரகக் கடத்தல் செய்தபோது அனுப்பியதில் ஒவ்வொன்றாய்ப் பிரித்து தான் தான் செய்தேன் என்று தம்பட்டம் அடிப்பவன்...

முன் இருந்த கிரகத்தில் கிராதகனாய் இருந்தவனை தண்டனையாய்த்தான் அங்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.. அதில் ஏதோ பழய நினைவுகளை சுமந்தபடி அலைந்து கொண்டிருக்கிறான்... இவன் எதையும் ஆக்கவில்லை... அழிக்கத்தான் வந்தான்.. ஏன் எனில் அவன் குணம் அப்படி..

தான் அவ்விடத்தை சேர்ந்தவன் என்று நம்ப வைக்க, தான் இங்கேயே பரிமாண வளர்ச்சி அடைந்து உருவானதாய் கட்டுக் கதை விட்டுக் கொண்டிருக்கிறான்.. இவன் அங்கு அதிகமாய் ஆயிரம் வருடங்கள் முன் வந்திருப்பானோ என்பதே சந்தேகத்துக்குரியது... வரலாற்றைத் திருத்தி எழுதி ஒரு மாயையை உருவாக்குவதில் வல்லவன்...

அழித்தல் ஒன்றே குறி.. அதில் அசகாய சூரன்...

இன்னும் சிறிது காலத்தில் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிடுவான்...

அந்தக் கிரகத்துக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!!
---முரளி


  • எழுதியவர் : முரளி
  • நாள் : 21-Apr-17, 7:55 am
  • சேர்த்தது : முரளி
  • பார்வை : 270
  • Tanglish : avan
Close (X)

0 (0)
  

மேலே