பார்வை வீச்சு உன் பாடு நம் காதல் படும்பாடு

இதயம் சேமித்த வார்த்தைகள் ஒன்றைக்கூட
உன்னால் இதழ் வழி உதிர்க்க ஆசையே இல்லையா ?
இரு விழி வழியே வீசி விட்டு போய்விடுகிறாய் !

பார்வை வீச்சு உன் பாடு
பொருள் புரிந்து உணர்தல் என் பாடு
நம் இருவருக்கும் நடுவே " காதல்" படும்பாடு

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (22-Apr-17, 12:40 pm)
பார்வை : 128

மேலே