பிறர் என்னவா

பாட்டிம்மா, இந்தப் பொண்ணுப் பேரு என்னனு கேட்டா நம்மளயே திருப்பிக் கேள்வி கேக்கறா!
😊😊😊😊😊
😊😊😊😊😊😊
அடியே பட்டணத்துப் பொண்ணு உம் பேரு என்னடி?
😊😊😊😊😊
பிறெர்னா {(Prerna) = (Inspiration)} பாட்டிம்மா?
😊😊😊😊😊
என்னடி உம் பேரச் சொல்லச் சொன்னா அந்தத் தீச்சட்டித் தலைப்பையன் சொன்னமாதிரி 'பிறர் என்ன?' -ன்னு எங்கிட்டயே கேள்வி கேக்கற?
😊😊😊😊😊.
எம் பேரு பிறெர்னா - தாம் பாட்டிம்மா.
😊😊😊😊😊
என்னடி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லற? சரி, அது கெடக்குது. உங் கேள்வி கேக்கற பேருக்கு அர்த்தமாவது தெரியுமா?
😊😊😊😊😊😊😊
என்னோட அம்மா அப்பாவுக்கே எம் பேருக்கான அர்த்தம் தெரியாது. எல்லாம் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கறாங்களேன்னு நான் பொறந்த ஒடனே அங்கிருந்த ஒரு இந்திக்கார செவிலி(Nurse)கிட்ட ஒரு நல்ல இந்திப் பேரச் சொல்லிச் சொல்லி கேட்டாங்களாம். அவுங்க எனக்கு பிறெர்னா -ன்னு பேரு வச்சாங்களாம்.
😊😊😊😊😊😊😊
சரியாப் போச்சு. தாய்மொழில பேரு வைக்கறத கேவலமா நெனைக்கற தமிழர்களும் இருக்கறாங்க. உம், நம்ம மக்கள் செய்யற பாவம்ண்டி இது.

எழுதியவர் : மலர் (24-Apr-17, 1:05 am)
பார்வை : 310

சிறந்த நகைச்சுவைகள்

மேலே