இதுவல்லவோ சுகம்
வெயிலில் நடந்து களைக்கையில்
மரநிழல் கண்டால் அது சுகம்
பகலில் உழைத்துக் களைத்து
கூலியைக் காண்பது ஏழைக்கு சுகம்
வாடிய நெற்பயிர் மழைநீர் பருகி
செழிப்பதைக் காண்பது மனதுக்கு சுகம்
பிரிந்த கணவன் அறியாமல் வந்து
சொக்க வைப்பது மனைவிக்குச் சுகம்
ஏழை உணவுண்டு அவன் முகமலர்தல்
காண்பது தருபவனுக்குச் சுகம்
உடலில் உதித்த கருவைக் குழவியாய்க்
காண்பது தாய்மைக்குச் சுகம்
ஆக்கம்
அஷ்ரப் அலி