என்னவளில் என் மயக்கம்

என் கவிதைக்குள் உன்னை
உன் அழகைப் பூட்டி வைக்க நினைத்தேன்
வார்த்தைகள் வரவில்லை
உவமைகள் உதிக்கவில்லை
நான் என்ன புலவன்தானோ
என்று என்னையே சந்தேகித்தேன்
அப்போதுதான் என் நிலைமை
எனக்கு சற்று புரிந்தது
உன்னைப் பார்த்து
உன் வடிவழகில் மயங்கியபின்
என் கற்பனையும் உன் அழகில்
சரணாகதி அடைந்தது என்று
பின்னே அங்கு கவிதை உருவாகுவது எங்கே
உன் பார்வையில் என்னை நீ
சிறை வைத்திருக்கும் வரை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Apr-17, 2:11 pm)
பார்வை : 92

மேலே