பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

நெற்றியில் இட்ட பொட்டு
என்னை எட்ட தள்ள
கட்டாத கூந்தல்
என்னை கட்டிப் போட
ஈர்புருவ வாள் கொண்டு
என் ஓர் உயிர் கொல்கிறாய் பெண்ணே
உன் காதுமடல் காதணி சொல்கிறது
என் அழகை ரசித்தால்
உன் நிலமையும் இதுதான்
உன் புன்னகையால் விழுந்த
கன்னக் குழி சொல்கிறது
இறந்து போனால் புதைக்க குழி தேடாதே
- பே.ருத்வின் பித்தன்

எழுதியவர் : ருத்வின் (26-Apr-17, 1:43 pm)
பார்வை : 389

மேலே