வேண்டாம் இன்னொரு தீவிபத்து...

பார்த்துப்பார்த்து வளர்த்த பிள்ளை,
பத்துத்திங்கள் கருவில் கனிந்த பிள்ளை..

வகுப்பறைக்கு போன பிள்ளை
தீக்கு இறையாய் ஆயினளோ...

பிஞ்சுக் கையால் கொஞ்சி கொஞ்சி
நெஞ்சில் இட்டு வளர்த்த பிள்ளை

அக்னியின் கோரத்தாண்டவத்தால்
அதன் பசிக்கு ஆளாய் ஆயினளோ ...

பள்ளிகளின் பணத்தாசை
பெற்ற பிஞ்சுகளை பிணமாக்கியதோ..

பற்றி எறிந்த பள்ளி நெருப்பு
பெற்ற வயிற்றில் கொள்ளியாக...

இனியும் வேண்டாம் அக்னியே
பிஞ்சுகளுடன் உன் வஞ்சம் எதற்கு...

பணத்தாசை கொண்ட மிருகங்களே
உயிருடன் எதற்கு உன் விளையாட்டு...

அக்னி தேவனின் கோர பசியால், கும்பகோணம் பள்ளியில் தீயிற் கருகி இறந்த 94 பச்சிளம் குழந்தைகளின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று,,,,,

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா.... (16-Jul-11, 2:05 pm)
பார்வை : 394

மேலே