தொழிலாளர் தினம்
===================
பாரினில் தொழிலாளர் கொண்டாடும் தினம்
பாலியல் தொழிலாளர் திண்டாடும் தினம்
காரினில் தலைவர்கள் நின்றாடும் தினம்
கட்சியின் பலம்தனை நிரூபிக்கும் தினம்
அரசியல் தொழிலாளர் கொடிகட்டும் தினம்
அடிமட்ட தொழிலாளர் பொடிதட்டும் தினம்
திரண்டிடும் தொழிலாளர் திருந்தாத தினம்
திரட்டிய நரிக்கூட்டம் வருந்தாத தினம்.
*மெய்யன் நடராஜ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
