உழைக்கும் கரங்கள்
ஊனை வருத்தி
உழைக்கும் கரங்கள்
கூனை கண்டும்
களைக்காத நெஞ்சங்கள்
வெயிலின் அரவணைப்பில்
வியர்வை குளியலில்
கைகலுக்கு கடிவாளம் பூட்டி
குடும்பத்திற்காக உழைத்து
கண் இமையாமல் களைத்து
ஓயாமல் துடிக்கும்
ஒரு அறை இதயங்கள்
- பே.ருத்வின் பித்தன்