மே தினம்
உழைப்பினால் வரும்
எந்நாளும் உவப்பு
உழைக்கும் மக்களுக்கு
வருவதில்லை சலிப்பு
உயரத் தேவை உழைப்பு
அதனால் வரும் களிப்பு
உழையாத மக்களை
பார்த்தால் வரும் வெறுப்பு
நாளும் உழைக்குது எறும்பு
அதைப்போல வாழ நீயும் விரும்பு
வீடும் நாடும் உயர
தேவை இப்போது உழைப்பு
உழைப்புக்கு கிடைக்கும்
ஊதியம் மதிப்பு
உழைப்பாளிகளை வாழ்த்துவது
சிறப்பு