ஆடும் பொம்மைகள்

விரல்களில் பிடித்த நூலில்
ஆடும் பொம்மைகள் !
வில்லன் கதாநாயகன்
கோமாளி
அதில் நீயும் நானும்
ஆடுகிறோம்
வில்லனாய் நாயகனாய் கோமாளியாய் !
விட்டால் விழுவோம்
உயர்த்தினால் ஆடுவோம்
திரையை மூடினால்
ஓசையின்றி நகர்வோம் !
இறைவன் ஒரு பொம்மலாட்டக்காரன் !

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-May-17, 9:42 am)
Tanglish : adum pommaikal
பார்வை : 141

மேலே