தொழிலாளி
தொடர்ந்து
தொழிலில் ஓய்வில்லாமல்
மழை, வெயில் பாராமல்
உடலை வருத்தி
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி ....
நால்வரின் நலன் கருதி
தன் நலம் பாராமல்
நம்பிக்கையோடு
உழைப்பை அள்ளித்தருபவன்
ஆக்கம் புரிந்துகொண்டிருப்பவன் தான்
தொழிலாளி.