மே தினம்

உழைப்பாளியே உனக்காக
மேதினம்
உழைக்க பிறந்தாய்
உடலில் ஊறுதியோடு
முதலாளி தழைக்க
முடிவில்லாமல் நீ உழைக்க
உன் குடும்பம் பிழைக்க..

உன் உழைப்பால் தான்
இந்த உலகம் வாழும்
இடமானது
உன் விரல் படாது இங்கு
ஒருஇடமேது..

உழைப்பில் உருவான
கட்டிடம்
முதல் கல்லறை வரை
உன் பெயர் சொல்ல இந்த
மே
தினம்..

கார்ல் மார்க்ஸ் கைஅசைவால்
தொழிலாளர் புரட்சி
லெனின் பேச்சில் உழைப்பவனின்
மூச்சு ஓட உழைப்பவனை
உயர்த்த மேதினம்..

மே தினமே இந்த
தினம்முதல்
உழைப்பவர் மேம்பட
பாதை கொடு

நாட்டு மக்களும்
உழைக்கவேண்டும் என
கற்றுகொடு
உழைக்கட்டும் மக்கள்
வளரட்டும் நம்நாடு..

உழைப்பவர் வாழ்க
நம் தேசம் வளர்க
வளரும் !
உழைக்கும்
நெஞ்சம்
கை கொடுக்கும் வரை
உழைப்பவரே உன்பாதம்
வணங்கும் இந்தியன்..

எழுதியவர் : சிவசக்தி (1-May-17, 11:46 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : maay thinam
பார்வை : 142

மேலே