உயிரோடு கலந்த காதல்
புதைந்த காதலின் நினைவுகள் ஆழ்மனதில் இருந்து அடிக்கடி வெளிப்பட்டு சிந்தனையை அலைக்கழிக்கின்றன அவள் இன்னும் என்னைக் காதலிக்கிறாளா? என்று...
மறந்துவிட்டு கடமையில் மூழ்கும் நேரமெல்லாம் அவளும் நானும் காதலித்ததைத் தெரிந்தவர்கள் வந்து மீண்டும் நினைவூட்டிச் செல்கிறார்கள் என்னவளின் இனிமையான நினைவுகள்....
மரணத்தைவிடக் கொடுமையானது, எனது உயிர்க்காதலி நலமாக இருக்கிறாளா? சந்தோஷமாக இருக்கிறாளா? என்ற கேள்விகள் மறுக்கமுடியாத என் இதயத்துடிப்பாகி போனதே....
எதிர்மறைகளால் யான் அக்கிரமிக்கப்படும் போதெல்லாம், என்னை உந்து சக்தியாய் நல்வழியிலே நடத்திச் சென்றவள் எப்படி இருக்கிறாளோ?...
என்னைக் கண்டால் கோபம் கொள்வாளோ?.
பேசாது சென்று என்னைக் கொல்வாளோ??..
எனக்கு உரிமையற்றவளாகி இருப்பாளோ???...
நானறியேன்...
எனது மரணத்திற்கு முன்பாக நான் ஒருமுறையாவது சந்தித்து பேச விழைக்கிறேன்
எனது பகுத்தறிவின் விழிப்பைத் தூண்டி என்னுள் அனுதினமும் குடியிருக்கும் அவளை...
சாதி செய்த சதியை மறக்கவில்லை இருதயங்கள் கொண்ட காதலுக்கெதிராய்...
காலத்தைத் துணையாக்கி, அன்பை ஆயுதமாக்கித் தண்டிப்பேன், உண்மைக்காதலுக்கு எதிரான அனைவரையும்.....