பார்த்தேன் இரசித்தேன்
பார்த்தேன் இரசித்தேன்
காதலொரு சுவைத்தேன்
சொல்லிட. தவித்தேன்
இவள்தான் துணையென
நினைத்தேன் திகைத்தேன்
அவளழகில் மலைத்தேன்
கலந்திட துடித்தேன்
கனவில் லயித்தேன்
காதலைப் பகிர்ந்தேன்
வாழ்க்கையைப் பயின்றேன்
இனிமையை நுகர்ந்தேன்
பிறவிப்பயன் அடைந்தேன்